அ.தி.மு.கவினருக்கு எதிராக போராட்டத்தில் குதித்த விஜய் ரசிகர்கள்!

  Newstm Desk   | Last Modified : 08 Nov, 2018 05:03 pm
vijay-fans-steps-down-for-protest-against-admk

கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட  அ.தி.மு.கவினர் சர்கார் பட பேனர்களை கிழித்ததால், அவர்களுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். 

தளபதி விஜய், ஏ.ஆர்.ரகுமான், ஏ.ஆர் முருகதாஸ் என்ற மெகா கூட்டணியில் உருவான சர்கார் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி இரண்டு நாட்களில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்படத்திலுள்ள கடுமையான அரசியல் வசனங்களால் தற்போது ஆளும் அ.தி.மு.கவினரின் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர் சர்கார் படக்குழுவினர். 

சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கோரி மதுரையில் அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்திய நிலையில், பிரபல தியேட்டரான சினிப்பிரியாவில் பிற்பகல் காட்சி ரத்து செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் போராட்டம் தொடரும் என அ.திமு..கவினர் தெரிவித்தனர்.

இதையடுத்து, கோவையிலும் போராட்டம் தொடங்கியுள்ளது. கோவை சாந்தி தியேட்டர் முன்பு அ.தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் சர்கார் பட பேனர்களையும் கிழித்துள்ளனர். பேனர்களை கிழித்ததையடுத்து அவர்களுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் களமிறங்கியுள்ளனர். பேனர்களை கிழித்த அ.தி.மு.கவினரை கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அ.தி.மு.கவினருக்கு எதிராக விஜய் ரசிகர்களும்  போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் இந்த விவகாரம் தமிழக அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close