சென்னை: தேவி, காசி தியேட்டரில் அதிமுகவினர் போராட்டத்தால் பதற்றம்

  Newstm Desk   | Last Modified : 08 Nov, 2018 06:14 pm
admk-against-sarkar-at-kasi-theatre

சென்னை தேவி, காசி திரையரங்கங்கள் முன்பு அதிமுகவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சர்கார் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் அரசியல் காட்சிகளை நீக்க வலியுறுத்தி போராட்டம் வலுக்கிறது. அதிமுக போராட்டத்தினால் அங்கு பதற்றம் நிலவுகிறது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படம், தீபாவளி விருந்தாக கடந்த நவம்பர் 6ல் ரிலீசானது. இப்படத்தில் தற்போதைய அ.தி.மு.க அரசு மற்றும் ஜெயலலிதா குறித்து இப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.   

இதனையடுத்து, மதுரை சினிப்ரியா தியேட்டரில் சர்கார் பிற்பகல் 2 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது. கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட  அ.தி.மு.கவினர் சர்கார் பட பேனர்களை கிழித்ததால், அவர்களுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். 

இந்நிலையில், சென்னை காசி திரையரங்கம் முன்பு அதிமுகவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சர்கார் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் அரசியல் காட்சிகளை நீக்க வலியுறுத்தி போராட்டம் வலுக்கிறது. அதிமுக போராட்டத்தினால் அங்கு பதற்றம் நிலவுகிறது. 

இதேபோல் சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்கிலும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்க்காரர்களை தடுத்து நிறுத்தும் வகையில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தில் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குளில் உள்ள பேனர்களை காவல்துறையினரின் அறிவுறுத்தலின் படி அகற்றி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close