அதிமுகவினருக்கு அடிபணிந்த சர்கார்! படக்காட்சிகளை நீக்க ஒப்புதல்!!

  ஐஸ்வர்யா   | Last Modified : 08 Nov, 2018 06:42 pm
sarkar-issue

திரையரங்கு உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்று சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படத் தயாரிப்புக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்கார் பட விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், படம் திரையிட தடை விதித்து கோவை, சென்னை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் கண்டிப்பாக இந்தப்படம் எந்த தியேட்டரிலும் திரையிட அனுமதிக்க மாட்டோம் எனவும் காட்சிகளை நீக்கும் வரை தொடர் போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரித்தனர். மேலும் விஜயின் உருவப்படம் மற்றும் பேனர்களை கிழித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படத் தயாரிப்புக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறுகையில், “அதிமுகவினரின் போராட்டம் தொடர்பாக தயாரிப்புக்குழுவிடம் பேசினோம், காட்சிகள் நீக்கப்படுவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. படம் தொடர்பாக அதிமுகவினரின் மனம் புண்படக்கூடாது என்பதே எங்களின் நோக்கம், நீக்கப்படும் காட்சிகள் குறித்து இன்று இரவு முடிவு செய்து, நீக்கப்பட்டு நாளை பிற்பகல் திரையிடப்படும்,  இதனால் அதிமுகவினர் போராட்டத்தை கைவிட்டு அமைதிகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார். 
 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close