விஜய்க்கு ஆதரவாக எழுந்த சூப்பர்ஸ்டார்!

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 02:39 am
rajinikanth-backs-vijay-and-sarkar

விஜய்யின் சர்கார் படத்தில், ஆளும்கட்சியை விமர்சிக்கும் பல்வேறு காட்சிகள் உள்ளதாக போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், விஜய் மற்றும் ஏ.ஆர் முருகதாஸுக்கு சாதனை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

ஏ,ஆர் முருகதாஸ் இயக்கத்தில்,  விஜய்,  கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி, வசூலில் பல சாதனைகளை புரிந்து வரும் படம் சர்கார். முழுக்க முழுக்க அரசியல் படமாக எடுக்கப்பட்டுள்ள சர்காரில், அரசியல்வாதிகளையும்,  அரசையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகளும் வசனங்களும் உள்ளது. இதனால், ஆளும் அதிமுக கட்சியின் அமைச்சர்கள், மூத்த உறுப்பினர்கள் படத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

படத்தில் சர்ச்சைக்குறிய காட்சிகள் நீக்கப்படும் என படத் தயாரிப்பாளர்கள் ஒருவழியாக ஒப்புக்கொண்டனர். இந்நிலையில், சர்கார் படத்திற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார். அதில், "தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" என எழுதினார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close