அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்: சர்காருக்கு ஆதரவளிக்கும் கமல்!

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 09:07 am
kamal-tweet-about-sarkar

விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும் என்று சர்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அ.தி.மு.க அரசு குறித்து கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். 

சர்கார் படத்தில் அரசின் விலையில்லா பொருட்கள் திட்டத்தினை  கடுமையாக விமர்சித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு காட்சியில் தோன்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், அரசு வழங்கிய மிக்ஸியை தூக்கி நெருப்பில் எறிகிறார். 

இதனைப்பார்த்த பல விஜய் ரசிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட விலையில்லா பொருட்களை தூக்கிப் போடும் வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

எனவே படத்தின் இயக்குநர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய்க்கு அ.தி.மு.க அரசு தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் அ.தி.மு.கவினர் போரட்டங்களும் நடத்தினர். இதனையடுத்து சில காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது. 

இதனையடுத்து நேற்று இயக்குநர் முருகதாஸ் வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். இதனை பற்றி பதிவிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம், முருகதாஸை கைது செய்ய இருக்கிறார்கள் என்று ட்வீட் செய்தது. ஆனால் அதனை போலீசார் மறுத்தனர். இதனையடுத்து பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கமல்ஹாசன் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

அதில்,"முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்" என கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close