இந்தியன் 2 படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால்!

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 09:53 am
dulquer-salmaan-to-act-in-important-role-in-indian-2

கமலின் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் மற்றும் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கமல்ஹாசன் நடிப்பில் 1996ம் ஆண்டு வெிளயான  படம் இந்தியன். சங்கர் இயக்கிய இந்தப் படத்தில், இரு வேடங்களில் கமல்ஹாசன் நடித்திருப்பார். கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. சங்கர் தற்போது 2.0 படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருப்பதால், ரிலீஸுக்குப் பிறகு இதன் வேலைகள் தொடங்க இருக்கின்றன.

லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தியன் 2 படத்தைத் தயாரிக்க இருக்கிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் உருவாகும் எனத் தெரிகிறது. நயன்தாரா இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், காஜல் அகர்வாலும் இந்த படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும், துல்கர் சல்மான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தெரிகிறது. ஆனால், இதுவரை அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close