மீண்டும் எடிட் செய்யப்படுகிறது சர்கார்: சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்!

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 10:28 am
controversial-scenes-in-sarkar-will-be-edited

சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை எடிட் செய்யும் பணிகள் இன்று காலை 10.30 மணியளவில் தொடங்கும் என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் ஶ்ரீதர் தெரிவித்துள்ளார். 

சர்கார் படத்தில் அரசின் விலையில்லா பொருட்கள் திட்டத்தினை  கடுமையாக விமர்சித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு காட்சியில் தோன்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், அரசு வழங்கிய மிக்ஸியை தூக்கி நெருப்பில் எறிகிறார். 

இதனைப்பார்த்த பல விஜய் ரசிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட விலையில்லா பொருட்களை தூக்கிப் போடும் வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் படத்தில் வில்லியாக நடித்திருக்கும் வரலட்சுமிக்கு கோமளவள்ளி என கதாபாத்திர பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயராகும்.  

எனவே படத்தின் இயக்குநர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய்க்கு அ.தி.மு.க அரசு தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் அ.தி.மு.கவினர் போரட்டங்களும் நடத்தினர். இதனையடுத்து சில காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது. 

இந்நிலைியல் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும் பணி இன்று காலை 10.30 மணி முதல் தொடங்கும் என்று மிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் ஶ்ரீதர் தெரிவித்துள்ளார். கோமளவள்ளி என்ற பெயர் கட் செய்யப்படும் என்றும் முருகதாஸ் வரும் காட்சிகள் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close