இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கோரி மனு

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 02:59 pm
police-had-come-to-my-house-late-tonight-and-banged-the-door-arm

சர்கார் படத்திற்கு பலர் கடுமையாக விமர்சனம் தெரிவித்து வரும் நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கோரி உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். 

சர்கார் படத்தில் அரசின் விலையில்லா பொருட்கள் திட்டத்தினை  கடுமையாக விமர்சித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு காட்சியில் தோன்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், அரசு வழங்கிய மிக்ஸியை தூக்கி நெருப்பில் எறிகிறார். 

இதனைப்பார்த்த பல விஜய் ரசிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட விலையில்லா பொருட்களை தூக்கிப் போடும் வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

— A.R.Murugadoss (@ARMurugadoss) November 8, 2018

 

இதனிடையே நேற்று இரவு முருகதாஸ் வீட்டிற்கு காவல் துறையினர் சென்றிருக்கின்றனர். இதுகுறித்து பதிவிட்ட ஏ.ஆர்.முருகதாஸ், "எனது வீட்டின் கதவை போலீசார் தட்டி உள்ளனர். நான் வீட்டில் இல்லை என்றதும் அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில் அவர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று மதியம் நடக்கிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close