சர்காருக்கு மட்டும் விளம்பரமா?- கலாய்த்த தமிழ்படம் இயக்குநர்

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 12:07 pm
c-s-amudhan-tweet-about-sarkar-issue

நாங்களும் சர்ச்சைக்குரிய படம் எடுத்தும் எங்களுக்கு ஏன் இது போன்று விளம்பரம் கொடுக்கவில்லை என்று தமிழ்படம் இயக்குநர் சி.எஸ்.அமுதன் கலாயத்து பதிவிட்டுள்ளார். 

சர்கார் படம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் நடிகர் விஜய் முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

 

— C.S.Amudhan (@csamudhan) November 9, 2018

 

இந்நிலையில் தமிழ்படம் இயக்குநர் சி.எஸ்.அமுதன் இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நாங்களும் இது போன்று தான் படமெடுத்தோம். ஆனால் எங்களுக்கு இது போன்ற விளம்பரம் கிடைக்கவில்லை. பாகுபாடான செயல்" என பதிவிட்டு பின் #IStandWithSarkaar எனவும் கிண்டலாக சேர்த்துள்ளார். இந்த ட்வீட் வைரலாகி வருகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close