சர்காருக்கு ஆதரவாக கிளம்பிய நடிகை குஷ்பு!

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 01:03 pm
kushboo-supports-vijay-over-sarkar-issue

உலக அளவில் ட்ரெண்டாகி வரும் சர்கார் படத்திற்கு ஆதரவாக திரையுலகினர் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் நடிகை குஷ்புவும் சர்காருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார். 

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள சர்கார் படம் தீபாவளி விருந்தாக கடந்த 6ம் தேதி ரிலீசானது. இந்த படம் வருவதற்கு முன்பாகவே கதை திருட்டு விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது சர்கார் படத்திற்கு எதிராக அ.தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதையடுத்து படத்தில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக படக்குழுவினர் ஒப்புக்கொண்டுள்ளனர். எனினும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வாருகிறது. 

இந்த சூழ்நிலையில், திரையுலகினர் பலரும் சர்கார் படத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்து கூறி வரும் நிலையில் நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக அரசு, மக்கள் மீது தனது அதிகாரத்தை திணிக்கிறது. கையை முறுக்குவது, மிரட்டுவது, பயத்தை உருவாக்க பார்ப்பது எல்லாம் புதிதல்ல, இதையெல்லாம் ஏற்கனவே பல விஜய் படங்களில் பார்த்துவிட்டோம். அரசியல்வாதிகள் ஏன் இந்த விவகாரத்தை இவ்வளவு பாதுகாப்பற்றதாக மாற்றிவிட்டார்கள்? பில்டிங் ஸ்டிராங் பேஸ்மென்ட் வீக் அ.தி.மு.க" என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close