நாட்டில் ஜனநாயகம் என்றோ ஒழிந்துவிட்டது: சர்கார் குறித்து பா.ரஞ்சித் ட்வீட்!

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 03:28 pm
pa-ranjith-tweet-about-sarkar-issue

சர்கார் விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித், இந்த நாட்டில் ஜனநாயகம் என்றோ அழிந்துவிட்டது என தெரிவித்துள்ளார். 

சர்கார் படத்தில் அரசின் விலையில்லா பொருட்கள் திட்டத்தினை  கடுமையாக விமர்சித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு காட்சியில் தோன்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், அரசு வழங்கிய மிக்ஸியை தூக்கி நெருப்பில் எறிகிறார். 

இதனைப்பார்த்த பல விஜய் ரசிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட விலையில்லா பொருட்களை தூக்கிப் போடும் வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

எனவே படத்தின் இயக்குநர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய்க்கு அ.தி.மு.க அரசு தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் அ.தி.மு.கவினர் போரட்டங்களும் நடத்தினர். இதனையடுத்து சில காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது. 

இதனையடுத்து நேற்று இயக்குநர் முருகதாஸ் வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். இதனை பற்றி பதிவிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம், முருகதாஸை கைது செய்ய இருக்கிறார்கள் என்று ட்வீட் செய்தது. ஆனால் அதனை போலீசார் மறுத்தனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பா.ரஞ்சித் பதிவிட்டுள்ளார். அதில், “சர்கார் விமர்சனத்தை எதிர்க்க அரசதிகாரத்தையும், வன்முறையையும் கையாளுபவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது, இந்த நாட்டில் என்றோ ஜனநாயகம் அழிந்து/இழந்து போய்விட்டது என்று” என தெரிவித்துள்ளார். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close