அரசு எதை செய்யக்கூடாதோ... அதை செய்கிறீர்கள்: சர்கார் விவகாரம் குறித்து வரலட்சுமி ட்வீட்

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 04:20 pm
varalakshmi-tweet-about-sarkar

அரசு எதை செய்யக்கூடாதோ அதை இந்த அரசு செய்துக் கொண்டு இருக்கிறது என்று சர்கார் படத்தால் எழுந்துள்ள சர்ச்சை குறித்து அந்த படத்தில் வில்லியாக நடித்த வரலட்சுமி சரத்குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

சர்கார் படத்தில்  சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக படத்தின் இயக்குநர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய்க்கு அ.தி.மு.க அரசு தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் அ.தி.மு.கவினர் போரட்டங்களும் நடத்தினர். இதனையடுத்து சில காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது.  மேலும் சர்கார் படம் மீண்டும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. 

இன்று மதிய காட்சிகளில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் இடம் பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் தணிக்கை செய்யப்பட்ட படத்தை மீண்டும் தணிக்கை செய்வது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று பல திரைத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அப்படத்தில் வில்லியாக நடித்த வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு படத்தைபார்த்து அஞ்சும் அளவிற்கு அரசு அத்தனை பலவீனமாக இருக்கிறதா?. நிலையை நீங்கள் இன்னும் மோசமாக்கி கொண்டு இருக்கிறீர்கள்.என்ன செய்யக் கூடாதோ அதனை தற்போது நீங்கள் செய்கிறீர்கள். முட்டாள் தனத்தில் இருந்து வெளியே வாருங்கள்" என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close