இயக்குநர் அவதாரம் எடுக்கும் விஷால்... நாய் தான் ஹீரோ!

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 09:33 pm
vishal-to-direct-film

நடிப்பு, அரசியல், நடிகர் சங்கம் என பல தளத்தில் அதிரடி காட்டி வரும் விஷால் தற்போது இயக்குநர் அவதாரம் எடுக்க இருக்கிறார். 

விஷால் நடிப்பில் இந்தாண்டு வெளியான இரும்புத்திரை, சண்ட கோழி–2 படங்களுக்கும் வரவேற்பு இருந்தது. நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிகளிலும் இருக்கிறார். அடுத்து இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். அதற்கான பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. அவர் இயக்க உள்ள முதல் படம் விலங்குகளை பற்றியது. 

தெருநாய்களும் முக்கிய கதாபாத்திரங்களாக இருக்குமாம். இதில் பிரபல நடிகை ஒருவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் அர்ஜூன் இயக்கிய படங்களில் விஷால் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close