திரையரங்குகளில் எடிட் செய்யப்பட்ட சர்கார்!

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 03:29 pm
edited-sarkar-movie-showing-in-all-theaters-from-noon

அ.தி.மு.கவினரின் எதிர்ப்பை அடுத்து, மறு தணிக்கை செய்யப்பட்ட சர்கார் இன்று பிற்பகல் முதல் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. 

விஜய், ஏ.ஆர்.ரகுமான், ஏ.ஆர் முருகதாஸ் என்ற மெகா கூட்டணியில் உருவான சர்கார் திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. இப்படத்திலுள்ள கடுமையான அரசியல் வசனங்களால், ஆளும் அ.தி.மு.கவினர் சர்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கோரி நேற்று முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஒப்புக்கொண்டது. அதன்படி, , மறு தணிக்கை செய்யப்பட்ட சர்கார் படம் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் அனைத்து திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. 

மறு தணிக்கை செய்யப்பட்ட போதும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்றும் அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்துவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close