அ.தி.மு.கவின் அளப்பரிய சாதனை! சர்காரில் வெறும் 5 நொடிகள் நீக்கம்

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 04:05 pm
what-scenes-are-removed-from-sarkar

அ.தி.மு.கவினரின் எதிர்ப்பை அடுத்து, சர்கார் படத்தில் வெறும் 5 நொடிகள் கொண்ட காட்சி மட்டுமே நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள சர்கார் படம் தீபாவளி விருந்தாக கடந்த 6ம் தேதி ரிலீசானது. இந்த படம் வருவதற்கு முன்பாகவே கதை திருட்டு விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது சர்கார் படத்திற்கு எதிராக அ.தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து படத்தில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக படக்குழுவினர் ஒப்புக்கொண்டனர். எனினும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வாருகிறது. 

தொடர்ந்து இன்று பிற்பகல் 2.30 மணி காட்சி முதல் மறு தணிக்கை செய்யப்பட்ட சர்கார் படம் அனைத்து திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. அரசின் இலவச பொருட்களை எரிப்பது போன்ற கட்சியையும், ஜெயலலிதா பெயரையும் அ.தி.மு.கவினர் நீக்கக்கோரினர். அதன்படி, கீழ் குறிப்பிட்ட காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டன. 

► இலவச பொருட்களை தீயிட்டு எரிக்கும் 5 நொடி காட்சிகள் நீக்கம். 

► கோமளவல்லி என்ற பெயரில்  'கோமள' என்ற சொல் மட்டும் ம்யூட் செய்யப்பட்டுள்ளது. 

► கொசு உற்பத்திக்குக் காரணமான பொதுப்பணித்துறை என்ற வரியில், பொதுப்பணித்துறை மற்றும் '56 வருஷம்' ஆகிய வார்த்தைகள் ம்யூட் செய்யப்பட்டுள்ளது. ம்யூட் செய்யப்பட்ட இந்த பெயர்கள் சப்டைட்டில் -ல் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close