சர்கார் காட்சிகளை நீக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு- எஸ்.வி. சேகர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 09 Nov, 2018 09:31 pm
sv-sekar-talk-about-sarkar

குறிப்பிட்ட திரைப்படம் தணிக்கைக்குப் பின்னர் சர்ச்சை இருப்பதாக சமூக ரீதியான பிரச்னைகள் ஏற்பட்டால் அதனை நீக்கித்தான் ஆக வேண்டும். இதுபோன்ற பிரச்னைக்கு படத்தின் காட்சிகளை நீக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என நடிகரும் இயக்குநருமான எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த முன்னாள் தணிக்கைக் குழு உறுப்பினர் எஸ்.வி. சேகர், “குறிப்பிட்ட திரைப்படம் தணிக்கைக்குப் பின்னர் சர்ச்சை இருப்பதாக சமூக ரீதியில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் அதனை நீக்கித்தான் ஆக வேண்டும். மறுதணிக்கை செய்வது எளிமையான நடைமுறைதான். ஒரு படம் வெளியான பிறகு காட்சியை நீக்கவோ, சேர்க்கவோ மறுதணிக்கைக்கு அனுப்ப வேண்டும். ஒரு படம் தணிக்கை செய்யப்பட்ட பின்னரும் அதனை தடை செய்வதற்கு மாநில அரசுக்கு முழு அதிகாரம் உண்டு. வியாபாரத்தை மட்டும் கணக்கில் கொண்டு கலைஞர்கள் கதை, காட்சிகளை திரைப்படத்தில் உருவாக்க கூடாது” என்று கூறினார். 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close