2.o திரைப்படத்தையும் வெளியிடுவோம்- ரஜினியை மிரட்டும் தமிழ் ராக்கர்ஸ்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 09 Nov, 2018 06:09 pm
tamil-rockers-tweet

ரஜினி நடித்த 2.0 திரைப்படத்தை விரைவில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது. 

தீபாவளி அன்று விஜய்யின் சர்கார் படம் வெளியானது. இந்நிலையில் படம் வெளியாவதற்கு முன்னரே `சர்கார்' திரைப்படம் அன்று மாலையே ஹெச்.டி பிரிண்டில் இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் சவால் விடுத்திருந்தது. இது படக்குழுவினரை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சொன்னது போலவே படம் வெளியான அன்று மாலையே சர்காரை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. 

திருட்டுத்தனமாக படத்தை இணையத்தில் வெளியிட்டு வரும் தமிழ்ராக்கர்ஸ் இணைய தளம் உள்ளிட்ட பல்வேறு முறைதவறி நடக்கும் தளங்களுக்கு செக் வைக்க திரையரங்குகளில் கேமரா உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை நடிகர் விஷால் செய்திருந்தாலும் இதுபோன்ற தவறுகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் 2.o திரைப்படத்தையும் இணையத்தில் வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் ட்விட்டரில் மிரட்டல்விடுத்துள்ளது. வரும் 29 ஆம் தேதி ரஜினியின் 2.o வெளியாகவுள்ள நிலையில் இதுபோன்று மிரட்டல் விடுக்கபப்ட்டுள்ளது அனைவரையும் மீண்டும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விஜய்யின் சர்கார் படத்தையும் எச்சரிக்கையை மீறி வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ் 2.o திரைப்படத்தை வெளியிடுமா?என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேணடும்.

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close