சோஷியல் மீடியாவில் நாங்கள் இல்லை: தமிழ் ராக்கர்ஸ்

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2018 12:23 pm
we-are-not-present-in-social-media-tamil-rockers

சர்கார் படம் வெளியான முதல் நாளிலே, அப்படத்தை இணையத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ், சமூக வலைத்தளங்கள் எதிலும் இல்லை எனவும், சமூக வலைத்தளங்களில் தங்கள் பெயரில் வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 

சர்கார் படத்தை முதல் நாளே இணையத்தில் வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டு வந்தது. அதன்படியே அன்றைய தினமே சர்கார் படம் இணையத்தில் வெளியிடப்பட்டது. 

அதுபோன்று ரஜினிகாந்தின் '2.0' திரைப்படம் ரிலீசாகும் தினமான 29ம் தேதியன்றே அது இணையத்திலும் வெளியாகும் என தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரிலான டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியாகியிருந்தது.

ஆனால், இன்று தமிழ் ராக்கர்ஸ், தங்களுக்கென எந்த ட்விட்டர் பக்கமும் கிடையாது என அறிவித்துள்ளது. எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் தாங்கள் இல்லை என்றும், தங்களது பெயரில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் விளக்கமளித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close