'இதுவும் கடந்து போகும், காலம் பதில் சொல்லும்' - அருண் விஜய் எதை குறிப்பிடுகிறார்?

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2018 01:22 pm
arun-vijay-tweet

பிரபல நடிகரான அருண் விஜய் ஒரு மொட்டையான டீவீட்டை போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

தமிழ் சினிமாவில் தற்போது சிறந்த நடிகராக இருப்பவர் அருண் விஜய். நடிகர் விஜயகுமாரின் மகனான இவர் சமீபத்தில் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். 'என்னை அறிந்தால்', 'செக்க சிவந்த வானம்' ஆகிய படங்களில் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து மக்களிடம் பெயர் வாங்கியுள்ளார். 

இந்நிலையில் தற்போது அருண் விஜய், தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு பரபரப்பான டீவீட்டை பதிவிட்டுள்ளார். அதில், 'இதுவும் கடந்து போகும், காலம் பதில் சொல்லும்' என பதிவிட்டுள்ளார். அவர் எதையும் குறிப்பிடாமல் மொட்டையாக ட்வீட் செய்திருப்பது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்கார் படத்திற்கும் அ.தி.மு.க கட்சிக்கும் இடையே நடந்து வரும் மோதலை பற்றி குறிப்பிட்டு இருக்கலாம் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close