விஜய்க்கு இதேதான் பொழப்பா..? பிரேமலதா மனக்குமுறலுக்கு இதுதான் காரணம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 10 Nov, 2018 01:30 pm
is-this-the-same-thing-for-vijay-premalatha-vijayakanth-s-annoyance

சமீபகாலமாக விஜய் சர்ச்சைக்குரிய படங்களில் நடித்து வருவதையே வேளையாக வைத்துள்ளார் என தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா குற்றம்சாட்டிய பின்னணி தற்போது வெளியாகி உள்ளது. 

சர்கார் சர்ச்சை குறித்து கருத்துத் தெரிவித்த அவர், ‘’சினிமாவை சினிமாவாகப் பார்க்க வேண்டும். அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மோதல்களில் ஈடுபட கூடாது. திரையுலகினர் திரைப்படங்களை சர்ச்சைக்குள் கொண்டுச்சென்று, அதன் மூலம் படத்தை ஓட்ட நினைக்கிறார்களா? என்றும் தோன்றுகிறது. சமீபகால நடவடிக்கைகள் பலவும் அப்படித்தான் மக்களை யோசிக்க வைத்துள்ளது.

அப்படியான படங்களில்தான் விஜய் சமீபகாலமாக நடித்து வருகிறார். இதையெல்லாம் யோசித்து பார்த்து விஜய் நடிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்து இருந்தார் பிரேமலதா. ஆனால் அவர் இப்படி பேசியதை விஜய் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். இத்தனைக்கும் விஜயகாந்த் சினிமா வரலாற்றில் மைல் கல்லாக அமைந்த ரமணா படத்தை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். அவரது திருமணம் விஜயகாந்த் தலைமையில்தான் நடைபெற்றது. பிறகு ஏன் சர்காருக்கு எதிராக பிரேமலதா இப்படி பேச வேண்டும்? விசாரித்தால், ‘ஆரம்ப கால கட்டத்தில் விஜயின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் விஜயகாந்த்.

அவரை ப்ரமோட் செய்வதற்காகவே பல படங்களில் நடித்துக் கொடுத்தார். இந்த நிலையில் விஜயகாந்தின் 40 வது திரையுலக ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் விஜய் அதை நிராகரித்து விட்டார். நன்றி மறந்தவராக அப்போதே விஜயை தேமுதிகவினர் திட்டித் தீர்த்தனர்.

அத்தோடு விஜய் கட்சி ஆரம்பித்தால் அது தேமுதிகவுக்கு பின்னடைவாக இருக்கும் எனக் கருதுகிறார் பிரேமலதா. தங்களது கட்சியைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலோனோர் விஜய் பக்கம் தாவி விடுவார்கள் என எண்ணுகிறார் பிரேமலதா. அதனால்தான் விஜயை பற்றி இப்படி விமர்சித்திருக்கிறார்’’ எனக்கூறுகிறார்கள்.   

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close