பரியேறும் பெருமாளுக்கு புகழாரம் சூட்டிய இயக்குநர் வெற்றிமாறன்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Nov, 2018 05:49 pm
director-vetrimaran-speech

தலித் அரசியல் பேசும் சினிமாக்களில் மாரி செல்வராஜ் ஒரு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறார். பரியேறும் பெருமாள் ஒரு மிகப்பெரியாக முன்நகர்வாக இருக்கும். கதையாகவும், கதாபாத்திரங்களாகவும், தொழில்நுட்பமாகவும் முழுமையான ஒரு சினிமாவாக இப்படம் அமைந்திருக்கிறது.

மக்கள் மனங்களை வென்ற “பரியேறும் பெருமாள்” திரைப்படம் பொது சமூகத்தில் உண்டாக்கிய விவாதங்களும், கலை உலகினர் இடையே உண்டாக்கிய உற்சாகமும் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. பல ஊர்களில், பல பாராட்டு விழாக்களின் தொடர்ச்சியாக சென்னையில் “மெய்காண் கலைஞர் தமிழ்ச்சங்கம்” ஏற்பாடு செய்திருந்த மதிப்பாய்வு நிகழ்வில் இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், ராம், அமீர், வ.கௌதமன், மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன்,“மாரி செல்வராஜ் ஏற்கனவே ராமிடம் 11 வருடங்கள் இருந்திருந்தாலும், அவருடைய வரவு தமிழ் சினிமாவில் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கியிருக்கிறது. இப்படத்தினை தயாரித்ததோடு மட்டுமல்லாமல், கடைகோடி வரை கொண்டு சேர்த்ததிலும் பா.இரஞ்சித்தின் பணி மிகப் பெரியது. தலித் அரசியல் பேசும் சினிமாக்களில் மாரி செல்வராஜ் ஒரு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறார். 

இது ஒரு மிகப்பெரியாக முன்நகர்வாக இருக்கும். கதையாகவும், கதாபாத்திரங்களாகவும், தொழில்நுட்பமாகவும் முழுமையான ஒரு சினிமாவாக இப்படம் அமைந்திருக்கிறது. எந்த நெருடலும் இல்லாமல் ஒரு வாழ்க்கையையும், காலத்தையும் கடந்து வருவதற்கு இப்படத்திற்கு இசை பலம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது” என்று பேசினார்.

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close