சர்கார் கோமளவள்ளியை தொடர்ந்து மாரி விஜயாவாக வரலட்சுமி சரத்குமார்

  Newstm Desk   | Last Modified : 11 Nov, 2018 10:26 am
varalakshmi-s-role-in-maari2

மாரி 2 படத்தில் நடித்திருக்கும்  சட்டம் மற்றும் நீதித்துறையின் இணை செயலாளர் விஜயாவாக நடிக்க உள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

கடந்த 2015ம் ஆண்டு வெளியான ’மாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக மாரி 2 படம் உருவாகி வருகிறது. தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும் வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பாலாஜி மோகன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் முடிவடைந்து டிசம்பர் மாதத்தில் திரைக்கு வர இருக்கிறது. படத்திற்கான விளம்பர பணிகளை தொடங்கியுள்ள படக்குழுவினர் சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தனர்.

அதைத்தொடர்ந்து நடிகை சாய்பல்லவி இந்தப் படத்தில் ஆட்டோ ஓட்டும் அராத்து ஆனந்தியாக நடித்துள்ளார் என்பதையும் படக்குழுவினர் வெளியிட்டனர். பின்னர் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் லுக் போஸ்டர்கள் வெளியாகின. அதேபோல் தற்போது வரலட்சுமி சரத்குமாரின் லுக் நேற்று வெளியானது. இந்தப் படத்தில் விஜயா என்ற கதாபாத்திரத்தில் அரசு அதிகாரியாக அவர் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் சட்டம் மற்றும் நீதித்துறையின் இணை செயலாளராக படத்தில் வருகிறது என்பதையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சமீபத்தில் வெளியான விஜய்யின் சர்கார் படத்தில் வரலட்சுமி கோமளவள்ளி என்னும் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close