அஜித்தின் 60-வது படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்

  திஷா   | Last Modified : 17 Nov, 2018 10:14 am
thala-60-with-this-director

நடிகர் அஜித் தற்போது இயக்குநர் சிவாவின் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் அஜித்தும் சிவாவும் நான்காவது முறை இணைந்துள்ளனர். பரபரப்பாக விஸ்வாசம் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைப்பெற்று வரும் நிலையில், படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜித்தின் 59-வது படத்தை சதுரங்கவேட்டை புகழ் வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் படபிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்குகிறது.

இதற்கிடையே அஜித்தின் 60-வது படத்தை இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்குவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஏற்கனவே பில்லா, ஆரம்பம் என அஜித்தின் 2 படங்களை விஷ்ணு இயக்கியுள்ளார். இதனை ராஜேஷ் கொட்டபாடியின் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறதாம். எழுத்தாளர் பாலகுமாரனின் ராஜேந்திர சோழன் நாவலை மையமாக வைத்து, இந்தப் படம் உருவாக இருக்கிறதாம்.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close