நயன்தாராவின் கொலையுதிர் காலம் ஜனவரியில் ரிலீஸ்

  Newstm Desk   | Last Modified : 18 Nov, 2018 02:48 pm
kolaiyuthir-kaalam-release-date

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் கொலையுதிர் காலம் படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என நயன்தாராவின் பிறந்தநாளான இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

உன்னைப்போல் ஒருவன், பில்லா 2 படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் 'கொலையுதிர் காலம்'. இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா, பாலிவுட்டின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. முழுக்க முழுக்க இங்கிலாந்திலேயே நடத்தி முடிக்கப்பட்டுள்ள படப்பிடிப்பில், இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே ஷூட்டிங் மிச்சம் இருப்பதாகச் சொன்னார்கள்.

 

— Etcetera Entertainment (@EtceteraEntert1) November 17, 2018

 

ஆனால், இப்படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் தமன்னா, பிரபு தேவா ஆகியோரை வைத்துத் தொடரவிருப்பதாகச் கூறினார்கள். படம் வெளிவருமா என்று நயன்தாரா மற்றும் இயக்குநருக்கு மட்டுமே தெரியும் என்றிருந்த நிலையில் படத்தின் இணைத் தயாரிப்பாளரான யுவன் சங்கர் ராஜாவின் ஒ எஸ் ஆர் பிலிம்ஸ் வெளியேற்றப்பட்டு தற்போது, 'செம போத ஆகாதே' படத்தை விநியோகம் செய்த எட்சட்ரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது.  

இந்நிலையில் இந்த படம் ஜனவரியில் வெளியாகும் என்று நயன்தாரா பிறந்தநாளான இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close