பாக்ஸராகும் அருண் விஜய்!

  திஷா   | Last Modified : 19 Nov, 2018 10:05 am
arun-vijay-s-next-titled-as-boxer

இயக்குநர் கெளதம் மேனனின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் நடிகர் அருண் விஜய்யின் கரியர் கிராஃப் ஏறியது. விக்டர் கதாபாத்தில் நடித்த அவருக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பைக் கொடுத்தனர். சமீபத்தில் வெளியான இயக்குநர் மணிரத்னமின் செக்க சிவந்த வானம் படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியிருந்தார் அருண் விஜய்.

இந்நிலையில் ஒரு புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார் அருண். பாக்ஸர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள, இந்தப் படத்தை விவேக் என்பவர் இயக்குகிறார். எக்ஸெட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் இதனைத் தயாரிக்கிறார்.

அருண் விஜய்யின் 27-வது படமான இதனை, அவரே தனது ட்விட்டரில் அறிவித்திருக்கிறார்.  அதோடு படத்தின் டைட்டில் லுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close