மெகா கூட்டணியில் ராஜமௌலியின் RRR ஷூட்டிங் துவங்கியது!

  Newstm Desk   | Last Modified : 20 Nov, 2018 05:30 pm
rajamouli-s-next-big-project-shoot-begins

பாகுபலிக்கு பின், மாபெரும் எதிர்பார்ப்புடன் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா நடிப்பில், எஸ்எஸ்.ராஜமௌலி இயக்கும் பிரம்மாண்ட திரைப்படம் RRRன் ஷூட்டிங்கின் ஹைதராபாத் அருகே துவங்கியுள்ளது.

பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி நடிப்பில் வெளியான பாகுபலி படத்தின் மூலம்  இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த வெற்றி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. தெலுங்கு மெகா ஸ்டார்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் தனது அடுத்த படத்திற்கான பின்னணி வேலைகளில் ராஜமௌலி தீவிரமாக ஈடுபட்டிருந்தார். RRR என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் நேற்று அதிகாரப்பூர்வமாக துவங்கியது. ஹைதராபாத் அருகே கொக்கபேட் என்ற இடத்தில்  பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது .

முதல் ஷெட்யூலிலேயே ராம்சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனராம். தமிழ், மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கான தமிழ் வசனங்களை மதன் கார்க்கி எழுதுகிறார். மரகதமணி இசையமைக்கிறார். டிவிவி மூவீஸ் சார்பில் தனய்யா இந்த படத்தை தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு துவங்கியதை ஒரு வீடியோ வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது RRR குழு.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close