வைரலாகும் 2.0 படத்தின் ஸ்டில்ஸ்!

  Newstm Desk   | Last Modified : 21 Nov, 2018 02:20 pm
director-shankar-2-0-movie-stills

நடிகர் ரஜினிகாந்த் - இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியிருக்கும் படம் 2.0. ‘எந்திரன்' படத்தின் 2ம் பாகமான இதனை ‘லைகா புரொடக்‌ஷன்' நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். 3D தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹீரோயினாக எமி ஜாக்சனும், அதிரடி வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய் குமாரும் நடித்துள்ளனர். 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இதற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே இதன் 2 பாடல்கள், டீசர், டிரெய்லர், மேக்கிங் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. 2.0 வரும் 29-ம் தேதி வெளியாவது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், சமூக வலைத்தளங்களிலும் பரப்பப்பட்டு வைரலாகி வருகிறது.

2.0 படத்தின் ஸ்டில்ஸ்!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close