ப்ரியங்கா சோப்ரா திருமணத்தில் பிரதமர் மோடி..?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 23 Nov, 2018 11:40 am
modi-as-chief-guest-for-priyanka-s-wedding

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா- நிக்ஜோன்ஸ் திருமண நிகழ்வில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


பாலிவுட் நடிகையான ப்ரியங்கா சோப்ராவுக்கும் அமெரிக்க பாடகரான நிக் ஜோன்ஸுக்கும் வரும் 2ம் தேதி இந்து முறைப்படி திருமணம் நடைபெற இருக்கிறது. மிகப்பிரமாண்டமான முறையில் ஜோத்பூர் அரண்மணையில் ஐந்து நாட்கள் இந்தத் திருமணம் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
இந்தக் கொண்டாட்டத்திற்காக நிக்ஜோன்ஸ் அமெரிக்காவில் பலகோடி மதிப்பிலான ஆடம்பரப்பொருட்களை வாங்கிவிட்டு இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். அவரை வரவேற்கும் விதமாக ’வெல்கம் ஹோம் பேபி’ என தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 29ம் தேதி தொடங்கும் இந்த நிக்ழவு மெஹந்தி நிகழ்வு, சங்கீத கச்சேரி என ஐந்து நாட்கள் தொடர உள்ளது. இதற்காக ஜோத்பூர் அரண்மனையை நாளொன்றுக்கு 2 கோடி வீதம் வாடகைக்கு எடுத்துள்ளனர். 

இந்தத் திருமணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள ப்ரியங்கா சோப்ரா தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை இந்தியா திரும்பிய நிக்ஜோன்ஸும், பரியங்கா சோப்ராவ்வும் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் சென்று தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்துள்ளதாக கூறுகிறார்கள். முன்னதாக கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த கிரிக்கெட் வீரர் விராத் கோலி- அனுஷ்கா ஷர்மா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மோடி கலன்ந்து கொண்டு இன்ப அதிர்ச்சி அளித்தார். அதேபோல் ப்ரியங்கா சோப்ரா திருமணத்திலும் அவர் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது. 

ஆனால், இதனை ப்ரியங்கா சோப்ராவோ அல்லது மோடி தரப்பினரோ உறுதிப்படுத்தவில்லை. இந்த திருமணத்தில் அரசியல்வாதிகள், இந்தி திரையுலக நட்சத்திரங்கள், ஹாலிவுட் திரையுலகினர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close