கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் பேட்ட படத்தின் இசை டிசம்பர் 9ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், காலா படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் இந்தபடத்தை தயாரித்துள்ளது. இந்த படம் 2019 பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்த படத்தில் நவாஸுதின் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, சசிகுமார், சனந்த் என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Forgot to add #PettaPongal2019 !! https://t.co/z8YcfLDh5E
— karthik subbaraj (@karthiksubbaraj) November 23, 2018
இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மீதான எதிர்ப்பார்பு பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதன் இசை டிசம்பர் 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வரும் டிசம்பர் 3ம் தேதி முதல் சிங்கிள், 7ம் தேதி இரண்டாவது சிங்கிள் வெளியாகும் என்றும், 9ம் தேதி இசை வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தலைவரிஸம் நிறைந்த பாடல்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
newstm.in