படப்பிடிப்பை நிறைவு செய்த தேவராட்டம் படக்குழு!

  திஷா   | Last Modified : 24 Nov, 2018 10:53 am

devarattam-shooting-wrapped-up

குட்டிபுலி, கொம்பன், மருது ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் முத்தையா தற்போது தேவராட்டம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் கெளதம் கார்த்திக் ஹீரோவாகவும் மஞ்சிமா மோகன் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். காமெடி வேடத்தில் சூரி நடிக்கிறார். 

இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். படத்திற்கு இசை நிவாஸ் கே பிரசன்னா. மதுரையை கதை களமாகக் கொண்ட இதன் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

சமீபத்தில் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளுக்கு இதன் டீசர் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் படபிடிப்பு முழுவதும் நிறைவடைந்திருக்கிறதாம். இறுதிநாள் படபிடிப்பில் தேவராட்டம் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய படங்கள் ட்விட்டரில் வெளியாகியிருக்கின்றன. தவிர, உடனடியாக இதன் போஸ்ட் புரொடக்‌ஷனை தொடங்கியிருக்கும் படக்குழுவினர், விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம். 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close