வைரலாகும் தியாகு எத்தியின் சின்ன வயது படம்!

  திஷா   | Last Modified : 24 Nov, 2018 11:32 am
simbu-and-arunvijay-s-childhood-pic-goes-viral

இயக்குநர் மணிரத்னம் சமீபத்தில் இயக்கியிருந்த செக்க சிவந்த வானம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அருண் விஜய், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்திருந்தார்கள்.  

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திருந்தன. படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு ஆகியோர் அண்ணன் தம்பிகளாக நடித்திருப்பார்கள். 

மூத்த அண்ணன் அரவிந்த்சாமி தங்களை வஞ்சிப்பதால், அருண் விஜய்யும் சிம்புவும் இணைந்து இதற்கு ஒரு முடிவு கட்ட நினைப்பார்கள். 

இந்நிலையில், தற்போது அருண் விஜய்யும் சிம்புவும் சின்ன வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று ட்விட்டரில் வைரலாகி வருகிறது. 

ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு இருக்கும் இந்தப் படம் செக்க சிவந்த வானம் திரைப்படத்தை நினைவூட்டுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close