மயில்சாமியின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் அல்டி டீசர்!

  திஷா   | Last Modified : 24 Nov, 2018 01:55 pm

mayilsamy-s-son-to-debut-with-alti

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் நடிகர் மயில்சாமி. நடிகர்கள் வடிவேலு, விவேக்குடன் இணைந்த்தும், தனிக் காமெடியனாகவும் நிறைய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான காற்றின் மொழி திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார். 

இந்நிலையில் தற்போது மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமாகிறார். எம்.ஜே.ஹுஸைன் இயக்கும் இந்தப் படத்தில் மனிஷா ஜித், மாரிமுத்து, பசங்க சிவக்குமார், சென்ட்ராயன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். 

'அல்டி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. 2019-ன் துவக்கம் அல்லது மத்தியில் படம் திரைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது. 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close