ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நிகழ்ந்திருக்கும் மாற்றம்!

  திஷா   | Last Modified : 24 Nov, 2018 12:51 pm
a-big-change-in-rajinikanth-a-r-murugadoss-film

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இதன் பாடல்கள் டிசம்பர் 9-ம் தேதி வெளியாகின்றன. 

இந்நிலையில் பேட்ட திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் படத்தில் நடிப்பார் என்ற செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன. தான் ரஜினியிடம் கதை சொல்லியிருப்பதை சர்கார் திரைப்படம் சம்பந்தமான நேர்க்காணலில் உறுதிப்படுத்தியிருந்தார் முருகதாஸ். 

முழுக்க முழுக்க அரசியல் கதை களத்தைக் கொண்ட அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது இதில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் அந்த புதிய படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறதாம். பேட்ட திரைப்படம்  வெளியான பிறகு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close