நாளை வெளியாகிறது கனா ட்ரைலர்!

  திஷா   | Last Modified : 24 Nov, 2018 02:44 pm
kanaa-trailer-from-tomorrow

பாடலாசிரியரும், பாடகருமான அருண்ராஜா காமராஜ் தற்போது கனா என்ற படத்தை இயக்கியுள்ளார். 
இந்தப் படம் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய 'ஸ்போர்ட்ஸ் படமாக' உருவாகியிருக்கிறது. இதில் கிரிக்கெட்டராக ஆசைப்படும் மகளாக ஐஸ்வர்யா ராஜேஷும், அவரது கனவை நனவாக்க பாடுபடும் தந்தையாக சத்யராஜும் நடித்துள்ளனர். படத்திற்கு இசை திபு நிணன் தாமஸ்.

சிவகார்த்திகேயனின் 'எஸ்.கே.புரொடக்‌ஷனின்' முதல் தயாரிப்பாக கனா வெளிவர இருக்கிறது. ஏற்கனவே இதன் பாடல்கள் வெளியாகி வரவேற்பு பெற்றிருக்கின்றன. 

இந்நிலையில் கனா படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபபட்டுள்ளது. ஆனால், வெளியிடப்படும் நேரத்தைக் குறித்து எந்தத் தகவலும் இல்லை. ஒரு வலுவான விளையாட்டு படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இதன் மூலம் இன்னும் அதிகரித்திருக்கிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close