ஒரு நாள் இரவுக்கு அழைத்த நபரை சமூக வலைத்தளங்களில் கிழித்தெடுத்த நடிகை!

  Newstm Desk   | Last Modified : 24 Nov, 2018 05:01 pm
actress-neha-saxena-humiliates-guy-who-asked-for-a-one-night-stand

தன்னுடன் ஒரு நாள் இரவை 'களிக்க' அழைப்பு விடுத்த நபரை, 'ஒரு மெல்லிய கோடு' பட நாயகி நேஹா சக்சேனா சமூக வலைத்தளங்களில் தோலுரித்துக் காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மெல்லிய கோடு, நீ என்ன மாயம் செய்தாய், லொடுக்கு பாண்டி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை நேஹா சக்‌சேனா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன், துபாயில் வேலை செய்யும் ஒருவர், தன்னுடன் ஒருநாள் இரவை கழிக்க நடிகை வருவாரா? என கேட்டு, அவரது மேனேஜருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதை பார்த்த நேஹா, அந்த நபர் பயன்படுத்தும் சமூகவலைதள பக்கங்களை தேடி கண்டுபிடித்துள்ளார்.

பின்னர் அவரின் பெயர், ஊர், இருப்பிடம், பணி செய்யும் இடம் என அனைத்தையும் கண்டுபிடித்து, அந்த நபரின் முழு விபரங்களையும் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். "இதுபோன்ற நாய்க்கு பாடம் புகட்டவும், பெண்களிடம் இவன் நடந்துகொள்ளும் விதத்தை அவனது குடும்பத்தினரும், மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, இந்த விஷயத்தை தான் தெரியப்படுத்தியுள்ளேன்," என எடுத்தினார் நேஹா. மேலும், "திருமணமான பின்னும், இப்படி பெண்களை வெளியில் சீண்டி வருகிறான். இது போன்றவர்கள் சமூகத்தில் இருக்கவே கூடாது" என்றும் பொரிந்து தள்ளினார்.

33 வயதான அந்த நபர் கேரளாவை சேர்ந்தவராவார். திருமணமாகி அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. தனது மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், தான் அதுபோன்ற மெசேஜ்களை ஒருபோதும் அனுப்பியதே இல்லை என்று கூறும் அவர், இதுகுறித்து அபுதாபி போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால், அவரின் விளக்கங்களை நடிகை ஏற்றுக்கொள்வதாக இல்லை... இந்த சம்பவத்தை வைத்து, இதுபோன்றவர்களுக்கு பாடம் புகட்டிய தீருவேன் என உறுதியாக உள்ளார். 

இந்த விஷயத்தை நடிகை எதிர்கொண்ட விதத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close