விஸ்வாசம் படத்தின் அட்டகாசமான அப்டேட்!

  திஷா   | Last Modified : 24 Nov, 2018 04:11 pm

viswasam-update

வரும் பொங்கல் சினிமா ரசிகர்களுக்கு அதிக கொண்டாட்டமாக அமையப் போகிறது. ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம், சிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற முக்கிய படங்கள், பொங்கல் ரேஸுக்கு தயாராகி வருகின்றன. 

இதில் விஸ்வாசம் படத்தை இயக்குநர் சிவா இயக்கியிருக்கிறார். வீரம், விவேகம், வேதளம் ஆகியப் படங்களைத் தொடர்ந்து இந்த வெற்றிக் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார், இசையமைப்பாளர் டி.இமான். 

இந்நிலையில், படத்தில் அஜித்தின் அறிமுக பாடல் 'வேட்டிக்கட்டு' எனத் தொடங்குகிறதாம். இதில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் வேலை செய்திருக்கிறார்களாம். இந்தத் தகவலை நடன இயக்குநர் அசோக் ராஜா ஒரு நேர்க்காணலில் தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியிருக்கிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close