விரைவில் வெளியாகும் எனை நோக்கி பாயும் தோட்டா!

  திஷா   | Last Modified : 25 Nov, 2018 09:56 am
enpt-coming-soon

இயக்குநர் கெளதம் மேனன் தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம், விண்ணைத் தாண்டி வருவாயா - 2 ஆகியப் படங்களில் பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இதில் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் தமிழில் அறிமுகமாகிறார். 

முக்கிய கதாபாத்திரத்தில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் நடித்திருக்கிறார். எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கெளதம் மேனன் இதனைத் தயாரித்திருக்கிறார். தர்புகா சிவாவின் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. 

இந்நிலையில் தீபாவளிக்கு இந்தப்படம் ரிலீஸாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்‌ஷன்கள் நடந்து வரும் நிலையில், டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில், படத்தை சென்சாருக்கு அனுப்ப இருக்கிறார்களாம் படக்குழுவினர். ஆகையால், விரைவில் எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸாகும் என்கிறார்கள் கெளதம் மேனன் ரசிகர்கள்!

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close