தளபதி 63-க்கு லொகேஷன் வேட்டையில் அட்லீ!

  திஷா   | Last Modified : 25 Nov, 2018 11:20 am

atlee-visited-ssn-college-for-location-hunt-thalapathy-63

சமீபத்தில் நடிகர் விஜய் நடித்திருந்த, சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. 

இந்நிலையில் விஜய்யின் 63-வது படத்தை இயக்குநர் அட்லீ இயக்குவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. தெறி, மெர்சல் என இவர்கள் கூட்டணியில் வெளியான இரண்டு படங்களும் மெகா ஹிட்.

ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கான பூஜை போடப்பட்டு, தொழில் நுட்பக் கலைஞர்களும் அறிவிக்கப் பட்டிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும், ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். முத்துராஜ் ஆர்ட் டைரக்டராக பணியாற்றுகிறார். அனல் அரசு சண்டை இயக்குநராகவும், விவேக் பாடலாசிரியராகவும் ஒப்பந்தமாகியிருக்கின்றனர். 

இந்நிலையில் சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள எஸ்.எஸ்.என் கல்லூரிக்கு விசிட் அடித்திருக்கிறார் அட்லீ. தளபதி 63 படத்திற்கு லொகேஷன் பார்ப்பதற்காகத் தான் அவர் சென்றார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு அவர் மாணவர்களுடன் எடுத்துக் கொண்ட படமும் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close