விஜய் சேதுபதி யாரு ?- வைரலாகும் கார்த்திக் சுப்பராஜின் பேஸ்புக் பதிவு

  Newstm Desk   | Last Modified : 25 Nov, 2018 02:22 pm
who-is-vijay-sethupathi-karthik-subburaj-s-viral-tweet

2010ம் ஆண்டு விஜய் சேதுபதி குறித்து கார்த்திக் சுப்பராஜ் பற்றிய பேஸ்புக் பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்த முதல் திரைப்படம் 'தென்மேற்கு பருவக்காற்று'. அந்த படம் 2010ம் ஆண்டு வெளியானது. அந்தப்படம் வெளியாவதற்கு முந்தைய நாள் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அதில், "நாளை தென்மேற்கு பருவ காற்று திரைப்படம் வெளியாகிறது. பெரிய திரையில் விஜய் சேதுபதியை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள் விஜய்" என கூறியிருக்கிறார். 

அந்த பதிவின் கீழ், "யாரு விஜய் சேதுபதி?" என ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு அப்போது பதில் அளித்த கார்த்திக் சுப்புராஜ், "அவரைப்பற்றி விரைவில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்" என்று தெரிவித்து இருந்தார். 

அவர் கூறியது போல், விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வளர்ந்துவிட்டார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close