டயர் நக்கி, குனிஞ்சி குனிஞ்சி கும்பிடு தமிழக அரசியலை நினைவு படுத்தும் 'அக்னிதேவ்' ட்ரைலர்

  திஷா   | Last Modified : 25 Nov, 2018 03:01 pm

bobby-simha-s-agni-dev-trailer

நடிகர் விக்ரமுடன் சாமி 2 திரைப்படத்தில் நடித்திருந்த பாபி சிம்ஹா தற்போது ரஜினிகாந்தின் 'பேட்ட', 'அக்னி தேவ்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவரே தயாரித்து நடித்துள்ள வல்லவனுக்கு வல்லவன் திரைப்படம் நீண்ட காலமாக தயாரிப்பில் உள்ளது. 

இதில் 'அக்னி தேவ்' படத்தை இயக்குநர்கள் ஜே.பி.ஆர் - ஷாம் சூர்யா இணைந்து இயக்குகிறார்கள். இதில் 'சென்னையில் ஒரு நாள் 2’ படத்தை இயக்கியவர் ஜே.பி.ஆர். பிரபல க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதிய ஒரு நாவலின் தழுவல் தான் அக்னி தேவ்.

டைட்டில் ரோலில் நடிக்கும் சிம்ஹாவுடன் முக்கிய ரோலில் காமெடி நடிகர் சதீஷ் நடிக்கிறார். படத்தின் ஹீரோயினாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் நடிகை மதுபாலா நடிக்கிறார். சேன்டோஸ் ஸ்டுடியோ – ஜெய் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து இந்த அக்னி தேவ் படத்தை தயாரித்திருக்கிறார்கள். 

தற்போது இதன் ட்ரைலர் வெளியாகி, பாபி சிம்ஹா ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. ட்ரைலரைப் பார்க்கும் போது தமிழகத்தின் முக்கிய பெண் அரசியல்வாதியைப் போல் மதுபாலா கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருப்பது தெரிகிறது. "சகுந்தலா தேவியாகிய நான், என் வீல் சேர் டயர நக்கிட்டு கெடக்குறதா இருந்தா கெடங்க" என மதுபாலா பேசும் வசனங்களும், வயதான தோற்றத்தில் வரும் மதுபாலாவுக்கு பின்னால் இளவயது ஜெயலலிதாவின் படம் மாட்டப்பட்டிருப்பதும், இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. 

ஆக மொத்தத்தில், தமிழக அரசியல் களத்தில் புரொமோஷனுக்கு தயாராகி விட்டது 'அக்னி தேவ்'.  
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close