கஜாவால் பாதித்த கிராமத்தை தத்தெடுத்த நடிகர் விஷால்!

  Newstm Desk   | Last Modified : 25 Nov, 2018 03:23 pm
vishal-contribution-to-gaja-victims

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சையின் கார்காவயல் என்ற கிராமத்தை நடிகர் விஷால் தத்தெடுத்துள்ளார். 

டெல்டா மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கி உள்ளது. தற்போது அந்த பகுதிகளில் நிவாரண பணிகள் வேகமாக நடந்து வருகிறது. கஜா புயல் பாதிப்பு பகுதிகளுக்கு பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். நடிகர், நடிகைகளும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் சங்கத்தின் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், நடிகருமான விஷால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை தத்தெடுத்துள்ளார்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தொகுதியிலுள்ள என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார். இதையடுத்து, மீண்டும், அந்த கிராமத்தை நான் பழைய நிலைக்கு கொண்டு வருவேன் என்று அவர் உறுதியளித்துள்ளார். மேலும், நாட்டின் சிறந்த கிராமமாகவும் இந்த கார்காவயலை மாற்றுவேன் என்றும் கூறியுள்ளார். அந்த கிராமத்திற்கு அவர் நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close