உலக இசைஞானியின் ரசிகர்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்!

  திஷா   | Last Modified : 25 Nov, 2018 05:11 pm

happy-news-for-ilayaraja-fans

இசைக்கு மயங்காத மனம் இப்பூமியில் இல்லை. அதுவும் இசைஞானி இளையராஜாவின் இசைக்கு செவி சாய்க்காத ரசிகர்களே இல்லை. 1976-ல் அன்னக்கிளி படத்தின் மூலம் தொடங்கிய இவரது திரையிசைப் பயணம் நாற்பது ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. 

இந்த பொற்காலத்தில் எத்தனை பேரின் சுக, துக்கங்களோடு அவர் கலந்திருக்கிறார் என்பதை கணக்கிட முடியாது. இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் எத்தனையோ அட்வான்ஸ்டு டெக்னாலஜிகள் வந்துவிட்ட போதிலும், அவரின் இசைக்கருவிகளின் இயல்பான ஒலி கொடுத்த சந்தோஷத்தை அவற்றால் நிரப்ப முடியவில்லை. 

இந்நிலையில், இளையராஜாவின் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. அவரின் பாடல்களை டவுன்லோடு செய்து, நினைத்தபோதில் கேட்டாலும் வானொலி மற்றும் பண்பலைகளில் ஒலிபரப்பப்படும் போது கேட்கும் சுகமே தனி தான். அந்த வகையில் எந்த ஒரு வானொலியும் செய்யாத ஒரு விஷயத்தை சிங்கப்பூரின் தமிழ் வானொலியான ஒலி 96.8 FM செய்து வருகிறது. 

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை, இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 முதல் மாலை 5.30 வரை தொடர்ந்து 4 மணி நேரத்திற்கு இசைஞானியின் பாடல்களை மட்டுமே ஒலிபரப்பு செய்வதுடன் அவரைப் பற்றிய தகவல்களையும் நேயர்களுக்கு தொகுத்து வழங்கி வருகிறது. 

கூகிள் ப்ளே ஸ்டோரில் oli 96.8 fm என்ற செயலியை டவுன்லோடு செய்தால் எந்த நாட்டில் இருந்தும், இசைஞானியின் இனிமையான பாடல்களைக் கேட்டு மகிழலாம். 

இது உலகளவில் இருக்கும் இளையராஜாவின் ரசிகர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.