ராகவா லாரன்ஸின் முதல் வீடு இவருக்குத் தான்!

  திஷா   | Last Modified : 25 Nov, 2018 09:20 pm

raghava-lawrence-s-first-step-for-gaja-affected-people

கடந்த வாரம் தமிழகத்தைத் தாக்கிய கஜா புயல் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு நடிகர்கள் பலரும் உதவி செய்து வருகிறார்கள். 

குறிப்பாக நடிகர் ராகவா லாரன்ஸ், புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 50 பேருக்கு தானே வீடு கட்டி தருவதாக அறிவித்திருந்தார். வீடில்லாமல் ஒரு பாட்டி அவதிப்படும் வீடியோவை ட்விட்டரில் இளைஞர்கள் சிலர் பதிவிட்டிருந்தார்கள். அதைப்பார்த்து மனம் வாடிய ராகவா லாரன்ஸ் அந்த இளைஞர்களை நேரில் சந்தித்திருக்கிறார். அதோடு அவர் கட்டப்போகும் 50 வீடுகளில் முதல் வீடாக அந்த பாட்டிக்கு வீடு கட்டி தருவதாகவும் தெரிவித்திருக்கிறார். 

இதனை ட்விட்டரில் வீடியோவோடு உறுதிப்படுத்தியிருக்கும் லாரன்ஸ், வீடு கட்டும் வேலைகள் இன்று முதல் தொடங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close