அர்னால்டுக்கு பதில் அக்ஷய் குமார்: ஷங்கர்

  Newstm Desk   | Last Modified : 26 Nov, 2018 04:47 am
arnold-was-approached-for-2-0-villain-role

ரஜினிகாந்தின் எந்திரன் 2.0 படத்தின் வில்லனாக அக்ஷய் குமார் நடித்துள்ள நிலையில், படத்திற்கு முதலில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸனேகரை அணுகியதாக இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உட்பட பலர் நடிப்பில் இந்த வாரம் வெளியாகிறது 2.0. மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீது கடும் எதிர்பார்ப்பு உள்ளது. டிக்கெட் விற்பனை ஏற்கனவே பல்வேறு தியேட்டர்களில் அனல் பறக்க விற்றுத் தீர்ந்துள்ளது. இதனால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். படத்தின் டீஸர், பாடல்கள் என எங்குமே 2.0 மையமாக தான் உள்ளது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் ஷங்கர் ஒரு புதிய துணுக்கை வெளியிட்டுள்ளார். இதன்படி பவர்ஃபுல்லான வில்லன் ரோலுக்காக ஒரு மிகப்பெரிய ஸ்டாரை நடிக்க வைக்க ஆலோசித்து வந்த ஷங்கர், அக்ஷய் குமாருக்கு முன்னதாக வேறு ஒருவரை மனதில் வைத்திருந்தாராம். அவர் வேறு யாருமில்லை... ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் அர்னால்டு தானாம். "நாங்கள் அர்னால்டுக்கு திட்டமிட்டிருந்தோம். அது பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தினோம், தேதிகள் கூட குறித்தோம். ஆனால் அது ஏனோ கூடவில்லை. ஹாலிவுட்டிலும் இந்தியாவிலும் காண்ட்ராக்ட்கள் வெவ்வேறு விதமாக உள்ளன. அதனால் இந்திய சினிமாவிலேயே வில்லனை தேட முடிவெடுத்தோம்" எனக் கூறினார்.

முன்னதாக ஐ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அர்னால்டை ஷங்கர் அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close