சர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்குநர் அட்லீ இயக்குகிறார். தெறி, மெர்சல் என இவர்கள் கூட்டணியில் வெளியான இரண்டு படங்களும் மெகா ஹிட்டான நிலையில், தளபதி 63 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது .
ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும், ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். முத்துராஜ் ஆர்ட் டைரக்டராக பணியாற்றுகிறார். அனல் அரசு சண்டை இயக்குநராகவும், விவேக் பாடலாசிரியராகவும் ஒப்பந்தமாகியிருக்கின்றனர்
இந்நிலையில் தளபதி 63-யின் ஹீரோயினாக யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கிக் கிடந்த நிலையில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
Extremely happy to have Darling #Nayanthara on board for #thalapathy63 ,after Regina which has always been close to my heart. Working the magic once again! pic.twitter.com/YuTLFDHqhs
இதனை தளபதி 63-யின் இயக்குநர் அட்லீ தனது ட்விட்டரில் அறிவித்திருக்கிறார்.