லைக்குகளைக் குவித்து வரும் விஸ்வாசம் மோஷன் போஸ்டர்!

  திஷா   | Last Modified : 26 Nov, 2018 11:20 am
viswasam-motion-poster

வீரம், விவேகம், வேதாளம் ஆகியப் படங்களைத் தொடர்ந்து நடிகர் அஜித் - இயக்குநர் சிவாவின் வெற்றிக் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கிறது. விஸ்வாசம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார் டி.இமான்.

பொங்கலுக்கு வெளியாகும் விஸ்வாசம் படத்தில் 'தூக்குதுரை' என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் நடிக்கிறார். இவரின் ஓப்பனிங் பாடலில் 500 நடனக் கலைஞர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள் என்ற செய்தியும் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. 

இந்நிலையில், தற்போது விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. யூ - ட்யூபில் வெளியாகியுள்ள இந்த போஸ்டரை இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close