'96' படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல கிரிக்கெட் வீரர்!

  திஷா   | Last Modified : 26 Nov, 2018 12:32 pm

dinesh-karthik-about-96

நடிகர் விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘96’. ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியிருந்த இந்தத் திரைப்படத்தில், இளம் வயது விஜய் சேதுபதியாக பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரும், இளம் வயது த்ரிஷாவாக கௌரி கிஷனும் நடித்திருந்தனர்.

கோவிந்த் வஸந்தா இசையமைத்திருந்த '96' திரைப்படத்தை ‘மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் இதனை தயாரித்திருந்தார்.

பள்ளி வயது காதலை மையப்படுத்தியிருந்த இந்தப் படத்தைப் பார்த்த பல பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் 96 படக்குழுவினருக்குத் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், 96 படத்தைப் பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளியுள்ளார். "என்ன ஒரு படம். நான் முழுமையாக ரசித்தேன். என்னுடைய ஃபேவரிட் பாடல், காதலே காதலே.  என்ன ஒரு பாடல். படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும், மியூஸிக்கையும் அளவில்லாமல் ரசித்தேன். 

சமீப நாட்களில் விஜய் சேதுபதியின் மிகப் பெரிய விசிறியாகி விட்டேன்.  ஆனால் 96 வெடித்தழ வைத்தது. கோவிந்த் வஸந்தாவின் இசை அற்புதம். வாஷிங்டன் சுந்தர், அபிநவ் முகுந்த், பாஸு அனைவரும் 96 படத்தின் மிகப்பெரிய விசிறியாகி விட்டார்கள். நீங்கள் எப்படி அஸ்வின்?" என சக கிரிக்கெட் வீரரான அஸ்வின் ரவிச்சந்திரனையும் கேட்டிருக்கிறார் தினேஷ். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close