ஹரீஷ் ரைஸாவைத் தொடர்ந்து, பிக்பாஸ் போட்டியாளர்கள் இணையும் அடுத்தப் படம்!

  திஷா   | Last Modified : 26 Nov, 2018 01:21 pm
mahat-and-aishwarya-team-up-for-a-romcom

சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைர்க்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி, பிக்பாஸ் - 2. இதனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதன் முதல் சீசனின் போட்டியாளர்களாக களம் இறங்கிய ஹரீஷ் கல்யாணும், ரைஸாவும் 'ப்யார் ப்ரேமா காதல்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர். காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இந்நிலையில் மேலும் இரு பிக்பாஸ் போட்டியாளர்கள் இணைந்து மற்றுமொரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள். ஆம்! பிக்பாஸின் 2-ம் சீசனில் கலந்துக் கொண்ட மஹத்தும், ஐஸ்வர்யா தத்தாவும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்கள். 

ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகும் இதனை அறிமுக இயக்குநர் பிரபு ராம் என்பவர் இயக்குகிறார். முதன் முறையாக இந்தப் படத்தில் தனி ஹீரோவாக நடிக்கிறார் மஹத்.  

வட சென்னை பையனாக மஹத் நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் டிசம்பரில் துவங்குகிறதாம்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close