யூ/ஏ சான்றிதழ் பெற்ற மாரி 2!

  திஷா   | Last Modified : 26 Nov, 2018 03:50 pm

maari-2-censored-with-u-a

நடிகர் தனுஷின் தர லோக்கல் திரைப்படமான மாரியின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். 

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மாரி 2 படத்தின் படபிடிப்புப் பணிகள் சில மாதங்களுக்கு முன்னரே நிறைவுற்று, போஸ்ட் புரொடக்‌ஷனும் முடிந்திருக்கும் நிலையில், மாரி 2 படத்தை சென்சாருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர். 

படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் தனுஷின் மாரி 2 திரைப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழை அளித்திருக்கிறார்கள். 

இதனை ட்விட்டரில் உறுதி செய்திருக்கிறார் தனுஷ்!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close