படமாகிறது பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு!

  திஷா   | Last Modified : 26 Nov, 2018 04:27 pm
bobby-simha-in-prabhakaran-s-biopic

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 64-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.

சீறும் புலி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை வெங்கடேஷ் குமார்.ஜி இயக்குகிறார். இதில் பிரபாகரனாக நடிகர் பாபி சிம்ஹா நடிக்கிறார். ‘ஸ்டுடியோ 18' என்ற நிறுவனம் இதனைத் தயாரிக்கிறது. பிரபாகரனின் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாபு சிம்ஹா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது தமிழ் தேசியவாதிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

ரஜினியுடன் தான் நடித்திருக்கும் பேட்ட திரைப்படத்தின் வெளியீட்டிற்கு காத்துக் கொண்டிருக்கும் பாபி சிம்ஹா, அக்னி தேவ், வல்லவனுக்கு வல்லவன் ஆகியப் படங்களில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close